book

வைணவத்தில் குலசேகரர்

₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. அச்சுதன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

உலக மொழிகளில் உயர் தனி மொழியாக இருப்பது தமிழ். தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி., 6,7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இலக்கியம் வளர்ச்சிப் பெற்றது. இவ்விலக்கியம் மனிதன் மனிதனாக வாழவும், அன்பு செலுத்தவும், பேராசைகளை அகற்றவும் துணை புரிகிறது.

இதனை சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் வளர்த்தனர். இவர்கள் சிவனையும், திருமாலையும் முழு முதற் பொருளாகக் கொண்டு தன்னை அர்ப்பணித்தனர். பக்தி என்பது பஜ்-பஜனை -கூடி வாழ வழி வகுத்தல் எனப் பொருள் படுகிறது. பக்தி என்னும் வட சொல் பஜ் என்னும் அடியாகப் பிறந்தது என்பர். அது பகிர்ந்து கொள், வழங்கு, அனுபவி, சேர்ந்து பெற்றுக் கொள், பிரி எனப் பலப் பொருள்களைக் கொண்டது என அறிஞர் கூறுவர்.

எனவே மனிதன் நிலையாமையை உணர்ந்து, நிலையானப் பொருள்கள் மீது பற்றுக் கொள்ள வேண்டும். இதனைத்தான் வள்ளுவர் ;பற்றற்றார் பற்றினைப் பற்ற வேண்டும்' என்றார். இதன் அடிப்படையில் திருமாலை முழு முதற் கடவுளாகக் கொண்டு வைணவத்தை வளர்த்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள், மனிதனுக்குள்ள அகங்காரம், பேராசை, கர்வம், பொறாமை, வஞ்சகங்களை அகற்றி அன்பெனும் பக்திப் பெயரை வளர்த்தனர். இவர்கள் பாடிய பாசுரங்கள் 3892. திருவரங்கத்தமுதனார் பாடிய இராமானுச நூற்றந்தாதியிலுள்ள 108 பாடல்களும் சேர்ந்து 'நாலாயிரத் திவ்ய பிரபந்தம்' என நாத முனிகள் தொகுத்துக் காட்டுகிறார். இறைவன் என்பவன் யார் என வினவக் கூடியவர்களுக்கு எந்த வடிவத்தில் எந்த பெயரில் அழைக்கின்றாரோ அப்பெயரே இறைவனாகிறது எனப் பொய்கையாழ்வார் கூறுகிறார். எனவே பக்தி பாசுரங்களை பன்னிரு ஆழ்வார்களும் பாங்குற பாடிப் பரமனைக் கண்டனர்.

இவ்வாழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வைணவத்தை வளர்த்தனர். குலசேகரர் திருமாலின் மீது கொண்ட பற்றினால் அரசப் பதிவியைத் துறந்து  அறப் பணிகள் செய்ய, பற்றற்று பற்றுள்ளவனிடம் பற்றுக் கொள்கிறார். இவர் இராமபிரான்மீது கொண்ட காதலால் கம்பருக்கு முன் இராமாயணச் சுருக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

தந்தையாகவும், தாயாகவும், மருத்துவனாகவும் இராமனை நினைத்து தாலாட்டியும், புலம்பியும் சிற்றிலக்கியதை வளர்க்கிறார். இதனால் மக்கள் தன்னிடம் இருக்கும் ஆகமங்களை அடக்கி  அன்புடன் வாழ வழி வகுக்கிறார்.