book

அண்ணாமலைப் பேருரை

₹33+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

18-11-1967 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல்வர் அறிஞர் அண்ணாவின் - ஆங்கிலத்தின் அழகும் அணியும் ஆழ்ந்த அழுத்தந்திருத்தமான கருதுரமும் மெத்தவும் பொதிந்த பட்டமளிப்பு விழாப் புத்தறிவு பேருரை!

பட்டம் பெற்று, பல்கலைக் கழகத்தினை விட்டு வெளியேறி வாழ்வுத்துறையில் அடியெடுத்து வைத்திடும் பட்டதாரிகளுக்குத் தக்கதொரு அறிவுரை அறிவுரை கூறிடுவதும், அவர்தம் வாழ்க்கைக்கு வழிகாட்டியென விளங்கிடத்தகும் விளக்குவுரையாற்றுவதும் லேசானதல்ல ... சுலபமான காரியமும் அல்ல! இது மெத்தவும் பொறுப்பான வேலை ... பொறுப்புச் சுமையுங்கூட!

இத்தகு பெரும் பொறுப்பினைச் சுமப்பதற்கான தகுத, திறமை, சிந்தனைச் சிறப்பு என்னிடம் உள்ளனவா! எனது அறிவு, ஆற்றல், சிந்தனை ஆகியவற்றின் எல்லைகள் எத்துணை குறைவானது! என்பதையெல்லாம் எண்ணிடும்போதுதான் எனக்குத் தயக்கமும் நடுக்கமும் ஏற்படுகிறது. 

அண்ணாமலைப் பட்டதாரிகளே! இத்தகு மேதகு பணியினைச் செய்திடத்தான் நீவிரெல்லாம் பட்டத் தகுதிப் பேருபெற்றுச் செல்கின்றீர் என்பதனை மறவாதீர்! அழியாப் புகழ் படைத்த அறிவாலயத்தின் பெருந்திறணும் பேருணர்வும் உமக்குப் பெருந்துணை புரிந்திடும் என்பது உறுதி! வெற்றியாக்கப் பேருறுதி நிச்சயம் உம்மிடம் உளது. வாழ்வினைத் தொடங்கிடுங்கள், வாழ்வுக்களம் நோக்கிச் சென்றிடுவீர், வென்றிடுவீர்!    

ஆசிரியரை பற்றி : காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (C. N. Annadurai) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[7]. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார். காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன.