book

மக்களைக் கையாளும் திறன்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லெஸ் ஜிப்லின்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :67
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387383388
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

தனிநபர் வளர்ச்சித் துறையின் முன்னோடிகளில் ஒருவரான லெஸ் கில்பின் 1912ல் பிறந்தவர். ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் ஒரு விற்பனையாளராக அவர் தன் தொழில்வாழ்க்கையைத் துவக்கி அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டார். மனித இயல்பைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றி முழுமையாகக் கற்றுக் கொள்ள இத்தொழில் அவருக்கு உதவியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் தலைசிறந்த விற்பனையாளர் பட்டத்தை இரண்டு முறை அவர் வென்றார். மக்களைக் கையாளும் கலையைப் பற்றியும் விற்பனைத் தொழிலில் சிறப்புறுவது எப்படி என்பது பற்றியும் அவர் பல பயிலரங்குகளை நடத்தியுள்ளார். அவர் ஒரு வெற்றிகரமான நூலாசிரியராகத் திகழ்ந்தார். அவருடைய புத்தகங்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. மக்களைக் கையாளும் கலைதான் உங்கள் வாழ்வில் நீங்கள் கைவசப்படுத்த வேண்டிய இன்றியமையாத திறன் என்ற அவருடைய செய்தி, நேரடியாக அன்றி கருவிகள் வாயிலாகக் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறுகிறது