book

குயில் பாட்டு மகாகவி பாரதியார் கவிதைகள்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாகவி பாரதியார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :34
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788188048359
Add to Cart

காலைத் துயிலெழுந்து,காலிரண்டு முன்போலே
சோலைக் கிழுத்திட,நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்தநின்று,சுற்றுமுற்றுந் தேடினேன்,
கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை.
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே
நீலக் குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும,
கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,
கண்டேன்,வெகுண்டேன்,கலக்கமுற்றேன்;நெஞ்சிலனல்
கொண்டேன்,குமைந்தேன்,குமுறினேன்,மெய்வெயர்த்தேன்;
கொல்லவாள் வீசல் குறித்தேன்.‘இப் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சி’யென