book

படுகைத் தழல்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர் முருகேசன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387636439
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019
Out of Stock
Add to Alert List

நாமெல்லாம் நம்பிக்கொண்டிருந்த `தமிழர்களின் குடவோலைமுறை’ தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அல்ல; பிராமணர்கள் மட்டுமே நறுக்கோலையில் பெயர் எழுதி குடத்தில் இட்டுத் தேர்ந்தெடுக்கும்முறை இவை போன்ற இன்னும் பல சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து நாவல் பேசியிருப்பதால் இந்த நாவல் நிச்சயம் தமிழ்ச் சூழலில் ஒரு தாக்கம் ஏற்படுத்தும்.”பெருமாள் முருகனின்`மாதொரு பாகன்’ நாவலைத் தொடர்ந்து,  தன் சிறுகதை ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சாதியைத் தவறாகச் சித்திரித்துள்ளதாகத் தாக்குதலுக்குள்ளானவர் புலியூர் முருகேசன். இவர் எழுதிய `பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் `நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்' என்ற சிறுகதை தங்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாகக் கூறி அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று ஒரு காட்டுப்பகுதியில் வைத்துத் தாக்கியுள்ளனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.