book

வழிநெடுக வைரங்கள்

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2018
ISBN :9788184766844
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

மனித வாழ்க்கை முறைகளும் பின்பற்ற வேண்டிய நெறிகளும் கொட்டிக் கிடக்கிறது, நம் சங்க இலக்கியக் கருவூலங்களில். வள்ளுவனும் அவ்வையும் அள்ளித் தந்துள்ள அறிவுரைகள், நீதி நூல்கள் கூறும் நன்னெறிகள் - இப்படி நம் சான்றோர்கள் விட்டுச் சென்றுள்ளவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது இந்த நூல். கோபம், பொறாமை, புறம்பேசுதல் - இவை இல்லாத வாழ்க்கையை மனிதன் வாழவேண்டும் என்பதைத்தான் நம் சங்க கால நூல்கள் அனைத்தும் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட இலக்கியங்களை ஆய்ந்து எடுத்து அழகாய் அடுக்கி, வாழ்வியல் உதாரணங்களோடும், சம்பவங்களோடும், கண்முன் விரியும் காட்சிகளோடும் தந்திருக்கிறார், நூலாசிரியர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், கணியன் பூங்குன்றனார், வள்ளலார், அழ.வள்ளியப்பா, பாரதிதாசன்... என அனைவரையும் இந்த நூலின் வழியே உலாவவிட்டிருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொருவரும் பேணிக் காக்க வேண்டிய தனி மனித ஒழுக்கம், வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான வழிமுறைகள் என அனைத்து வகையான போதனைகளையும் எளிதாகச் சொல்லியிருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். நூலைப் புரட்டுங்கள்! உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்திட இந்த வைரங்களை அள்ளுங்கள்!