book

நாம் அறிய வேண்டிய மருத்துவ குறிப்புகள்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.S.N. முரளிதர்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

மருத்துவத் துறையின் அடிப்படை நிலையில் நோயை அனுபவிப்பவன் ஒருவன், அதைக் குணப்படுத்தும் அறிவு படைத்தவனோ இன்னொருவன், அதாவது மருத்துவன். நோயுற்றவனுக்கு நோயின் அனுபவமிருக்கும், மருத்துவனுக்கோ நோயின் அனுபவமிராது. ஆனால் அதைப் பற்றிய அறிவு இருக்கும். நோயாளிக்குத் தன் உடலிலுள்ள நோய் பற்றிய அறிவு இருக்கவோ மருத்துவனால் நோயின் தன்மையை முழுவதுமாக உணரவோ முடியுமா? இவ்வாறு நோயின் அனுபவமும் அதைப் பற்றிய அறிவும் பிரிந்திருத்தல் மருத்துவத்தில் இயல்பு நிலை. இதை வெவ்வேறு மருத்துவ முறைகள் எப்படி அணுகுகின்றன? இதை எதிர்கொள்வதிலுள்ள சிக்கல்கள் எவை? இவை மருத்துவனுக்கும் நோயாளிக்குமுள்ள உறவை எப்படிப் பாதிக்கின்றன? இத்தகைய கேள்விகள் மருத்துவ முறைகளை ஒப்பிட்டுப் பார்க்க வழிவகுக்கின்றன. சாதாரணமாக மானுடவியலில் அறிவியலையும் மந்திர மாயத்தையும் எதிர்நிலைகளாகக் காட்டி முன்னதை நவீன மேலைக் கலாச்சாரத்துடனும் பின்னதை மீதமுள்ள எல்லாக் கலாச்சாரங்களுடனும் தொடர்புபடுத்திப் பார்ப்பது வழக்கமாகயிருந்தது.