book

டான் குயிக்ஸாட் பாகம் 2

₹650
எழுத்தாளர் :செர்வான்ட்டிஸ்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :520
பதிப்பு :1
ISBN :9789381343425
Add to Cart

“டான் குயிக்ஸாட் தீவின் கவர்னர் சான்க்கோ பான்ஸாவுக்கு எழுதிய கடிதம். நண்பனே சான்க்கோ... நீ ஆளும் மக்களைக் கவர இரண்டு காரியங்களை கண்டிப்பாகச் செய்ய வேண்டும். முதலாவதாக நீ எல்லோரிடத்திலும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக மக்களுக்குப் போதிய உணவு கிடைக்குமாறு செய்ய வேண்டும். பசியையும் விலையேற்றத்தையும் விட மக்களுக்கு எரிச்சலூட்டுவது வேறு எதுவும் இருக்கமுடியாது. அளவுக்கதிகமாக அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்காதே; நீ செய்யும்  அறிவிப்புகள், நிறைவேற்றப்படக் கூடியவையாக இருக்கட்டும்... செயல்படுத்தப்படாமல், அச்சுறுத்த மட்டுமே போடப்படும் சட்டங்கள் மரக்கட்டைகளுக்குச் சமம்... சிறைச் சாலைகள், கடைவீதிகள், கசாப்புக் கடைகள் போன்ற இடங்களுக்குச் சென்று நீ பார்வையிட வேண்டும்... பணத்திற்கு ஆசைப்படுபவனாகவோ, பெண்களின் மீது நாட்டம் உடையவனாகவோ, பெருந்தீனிக்காரனாகவோ நீ இருக்கக்கூடாது. இதுபோன்ற பலவீனங்கள் உன்னிடமிருந்து, அவை மக்களுக்கும் உன்னோடு தொடர்புடையவர்களுக்கும் தெரிந்துவிட்டால், உன்னுடைய நிலைமை தர்மசங்கடமாகிவிடும். அவர்கள் உன்னை எதிர்ப்பதுடன் உன்னுடைய அழிவிற்கும் வழிவகுத்து விடுவார்கள்...”