book

வக்ஃபு சட்டம் (The Wakf Act)

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :424
பதிப்பு :2
Published on :2015
Out of Stock
Add to Alert List

வக்ஃப் வாரியம் என்றால் என்ன, தற்போது ஆளுநர் வெளியிட்டுள்ள உத்தரவு சட்டபூர்வமானதா என்பன குறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரனிடம் பேசினோம். "முஸ்லிம் மக்கள், அவர்களின் சொத்துகளை வக்ஃப் பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு இந்தியாவில் மட்டும் தானமளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இப்படி தானமளிக்கப்படும் வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்க, பொது மற்றும் தனியார் வக்ஃப் அமைப்புகள் உள்ளன. இவற்றைக் கண்காணித்து, நடுநிலைமையோடு வழிநடத்தி, நிதியை நிர்வகித்து, வக்ஃப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பது போன்ற பணிகளைச் செய்ய வக்ஃப் வாரியம் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கிறது.