book

மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. பார்த்திபன்
பதிப்பகம் :வாசகன் பதிப்பகம்
Publisher :vasagan Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789383188307
Add to Cart

இந்தியா மிகப்பெரிய சுயநலங்கலந்த சாதி பேத கடவுள் கொள்கை கொண்ட ஒற்றுமையில்லாத முட்டாள்களை உள்ளடக்கிய உலகளாவிய சந்தை என்பதை நினைவில் கொள்க!!

நாட்டை ஆள்வது சற்று சிரமம் போல் தோன்றினாலும் அது ஒரு மாய பிம்பமே!! இதுவும் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்குச் சமமே.

அதற்காக நமது வரிப்பணத்தை, சீப்பு முதல் சோப்பு வரை எல்லா பொருள்களுக்கும் வரியாகச் செலுத்துகிறோம். அதோடின்றி வருமான வருவாய், நிறுவனங்கள் மூலம் வரும் வருவாய், இதர நிலைகளில் இருந்து வரும் பல்வேறு வருவாயையும் நாட்டிற்குக் கொடுத்துவிட்டு பின்பு அவர்களை, இந்த நாட்டை அதாவது இந்த நாட்டு மக்களான நம்மைப் பாதுகாருங்கள் என்று சொல்கிறோம். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி கூட தனது கடைசி வரியை, தான் வாங்கும் எதாவது ஒரு பொருளின் வாயிலாக, குறிப்பாக நஞ்சு வாங்கி தற்கொலை செய்து கொள்வதானாலும், அவன் வாங்கிய அந்த நஞ்சிற்கான தனது கடைசி வரியையும், இந்த நாட்டிற்கு இறப்பதற்கு முன்பு செலுத்திவிடுகிறான் என்பதை இங்கு பதிய கடமைப்பட்டுள்ளேன் தோழமைகளே!!

பொருளாதார நுட்பங்களைக் கொண்ட இந்த நூலானது,சாதாரண மனிதனும் தன்னுடைய பொருளாதார அரிவாள் வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்கிற சக மனிதனின் மீதான அக்கறையால் எழுதப்பட்டிருக்கிறது