book

நொய்யல் இன்று (பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்)

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.சு. வேலாயுதன்
பதிப்பகம் :சப்னா புக் ஹவுஸ்
Publisher :Sapna Book House
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386631404
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

காஞ்சிமா” ஆறு என்ற பெயர் கொண்ட “நொய்யல்” “காணாமல் போன ஆறு” என்று பெயர் கொண்டிருப்பதுதான் மனிதன் நீரை வஞ்சித்த கதை. நிஜம் அடித்து நீர் வடித்த பிழை. சமகாலம் கொண்ட வாழ்வாதாரங்கள் சந்திக்கும் இயற்கையின் வலி.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை- வெள்ளியங்கிரி மலை-யில் உருவாகும் இந்த ஆறு “நீலி”யாறாக மாறி….பின் “தொள்ளாயிரத்து மூர்த்தி கண்டி” என்ற வைதேகி நீர்வீழ்ச்சியாகவும்  இந்தப்பக்கம் “கோவைக் குற்றால”மாகவும் பிரிந்து மீண்டும் பல சிற்றோடைகளோடு இணைந்து “தொம்பிலிபாளையம் கூடுதுறை”யில் “நொய்யல்” என்ற ஆறாக உருவாகிறது.

அதன் பிறகு கோவையை சுற்றியுள்ள உக்குளம்.. பெரிய குளம்… வேடப்பட்டி குளம், முத்தண்ணன் குளம், செல்வா சிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் போன்ற பல குளங்களை நிரப்பி விட்டு ஒரத்துப்பாளையம், திருப்பூர், ஊத்துக்குளி வழியாக கரூர் சென்று காவேரியில் கலக்கிறது.

உருவாகும் இடத்தில் இருந்து காவேரியில் கலக்கும் வரை நொய்யல் ஆறு கிட்டத்தட்ட 170 கிலோ மீட்டர் பயணிக்கிறது.

கோவையை சுற்றி இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள் வளம் கொழிப்பவை. பசும் புல் வெளிகளும், சோலை வனங்களும் பசுமை மாறாக் காடுகளுமாக உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலை நீர்ச்சுனைகளும்… நீரோடைகளும் நிறைந்தவை. அதன் ஒரு பகுதி தான் “தென்கயிலாயம்” என்று சொல்லும் வெள்ளியங்கிரி மலை. அதிலிருந்து ஜடை ஜடையை வெள்ளி நீர் துளிகள் கொட்டுவதை காணவே நற்பயன் செய்திருக்க வேண்டும். வெள்ளியங்கிரியில் “சீதைவனம்” என்ற இடத்தில் உருவாகும் இந்த நொய்யல்.. பல பள்ளங்களை நிரப்பி.. அணைக்கட்டுகளை நிரப்பி இறுதியில் கரூரில் நொய்யல் கிராமத்தில் காவேரியில் கலக்கிறது. வழியெங்கும் ஏராளமான பகுதிகளை செழித்தோங்க வைத்து போனது பசுமையான வரலாறு என்று ஆசிரியர் சொல்ல சொல்ல நினைவுகளில் பசுமை சொட்டுகிறது. இன்றைய நிஜம் தேளின் தீவிரத்தோடு கொட்டுகிறது.