book

வீர சிவாஜி

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.இரா. சாந்தகுமாரி
பதிப்பகம் :சப்னா புக் ஹவுஸ்
Publisher :Sapna Book House
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789387308305
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

நம்மை ஆண்ட பல நூறு மன்னர்களில் வெகு சிலரை மட்டுமே இன்றளவும் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களிலும் வெகு சிலரை மட்டுமே கொண்டாடவும் செய்கிறோம். சத்ரபதி சிவாஜிக்கு அந்த வரிசையில் ஒரு தனியிடம் உண்டு. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர் பேரரசர் சிவாஜி. அந்நியத் தாக்குதல்களுக்கு ஆட்படாத ஒன்றுபட்ட இந்திய தேசத்தை உருவாக்குவதே அவருடைய பெரும் கனவாக இருந்தது. இந்தக் கனவை நிறைவேற்ற உள்ளூர் மற்றும் அயல்நாட்டு ஆக்கிரமிப்புச் சக்திகளுடன் தொடர்ச்சியாக அவர் போரிடவேண்டியிருந்தது. வீரத்துக்கும் வலிமைக்கும் ராஜதந்திரத்துடன்கூடிய போர்முறைக்கும் அடையாளமாக இன்றளவும் சிவாஜி கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிவாஜியின் எதிரிகளோடு ஒப்பிடுகையில் அவருடைய ராணுவம் மிகவும் சிறியது. ஆனாலும் அதையே தன்னுடைய ஒரு பலமாக மாற்றி, நவீன கெரில்லா போர்முறையை வளர்த்தெடுத்து வெற்றிகள் பல குவித்தார். கட்டுக்கோப்பான ராணுவத்தை உருவாக்கி, வழிநடத்திச் சென்றதில் மட்டும் சிவாஜியின் வெற்றி அடங்கியிருக்கவில்லை. அதே கவனத்தை அவர் நிர்வாகத்திலும் செலுத்தினார். ஒரு பேரரசர் எப்படித் திகழவேண்டும் என்று மட்டுமல்ல ஒரு தேசத்தின் தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் வீர சிவாஜி. இந்தப் புத்தகம் அவர் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் குதிரையின் பாய்ச்சல் நடையில் சுவாரஸ்யமாகச் சொல்கிறது