book

இந்திய சீனப் போர்

₹332.5₹540 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜனனி ரமேஷ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184937923
Add to Cart

இந்திய சீன எல்லை காலாகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ஏற்கெனவே தெளிவாக வரையறை செய்யப்பட்டுவிட்டது. எந்தப் பேச்சுவார்த்தைக்கும் மறு பரிசீலனைக்கும் இடம் இல்லை. இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.

இந்தியா எந்த அடிப்படையில் அப்படிக் கறாராகச் சொன்னது? கைலாசம் என்பது இந்துக்களின் இந்தியர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த விஷயம் என்பது மட்டுமே இந்தியா உரிமை கோரும் பகுதிகளுக்கான நியாயத்தை வழங்கிடமுடியுமா? இந்தியத் தரப்பில் வேறு என்னென்ன நியாயங்கள் உண்டு?

முதலாளித்துவ நாடுகள் மட்டுமல்லாமல் ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகளும் சீனாவை ஏன் எதிர்த்தன? தன்னைவிட பல மடங்கு ராணுவ பலமும் நிலவியல் சாதகங்களும் கொண்ட சீனாவை இந்தியா எந்த அடிப்படையில் எதிர்த்தது? சீனா போரில் ஈடுபடாது என்று எந்த தைரியத்தில் இந்திய வீரர்களை எல்லைப் பகுதியில் பணையம் வைத்து அனுப்பியது? இந்திய ராணுவத்துக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் இடையில் என்னென்ன வாக்குவாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடந்தன?

தி டைம்ஸ் இதழின் புது தில்லி நிருபராகப் பணியாற்றிய நெவில் மாக்ஸ்வெல் இந்தப் போரை அருகிலிருந்து ஆராய்ந்தவர். இந்திய சீனப் போரை நடுநிலையுடன் ஆராயும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரே நூல் இதுவே.