book

தொல்லை தரும் தோல் நோய்கள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பெ. போத்தி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

நோயின் தீவிர நிலையில் கடும் காரத்தன்மையுள்ள மருந்துகளை உபயோகித்தால்தான் நோய் கட்டுப்படும். காரத்தன்மை அதிகம் மிகுந்த, மூலிகை மருந்துச்சத்துக்கள் அதிகம் நிறைந்த அற்புத மூலிகைதான் சதுரக்கள்ளி.சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை தோலில் சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வரலாம். மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, நல்லெண்ணெயில் மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகாமாரீச்சாதி தைலத்தில் சதுரக்கள்ளி இலைச்சாறு சேர்க்கப்படுகிறது. இதனை கிருமித்தொற்று உள்ள இடங்களில் தடவி வரலாம்.