
உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் எப்போது?
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
ஜோதிடம் என்பது பலவிதமான விதிகளை கொண்டது. இங்கே மூலக்கருத்து மட்டுமே நிரந்தரமானது. அதை மட்டும்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேம்போக்காக பார்க்கும்போது சில ஜாதகங்களில் யோகங்கள் இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம். சாதித்துக் காட்டிய உண்மையான ராஜயோக ஜாதகங்களில், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அரச யோக அமைப்புகள் அனைத்தும் நமக்குத் தெரிய வேண்டும் என்கின்ற அவசியமில்லை.வேதஜோதிடம் முழுமை பெற்று விட்ட ஒன்றல்ல. அது ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்து புதிது புதிதாக விதிகளைச் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு முற்றுப் பெற முடியாத கலை. சாதித்தவர்களின் ஜாதகங்களில் உள்ள அமைப்புகளை கொண்டு நாம் சில விதிகளை உருவாக்கிக் கொள்ள முடியும் அல்லது உணர முடியும்.காலம் காலமாக குழப்பமாக, தெளிவற்ற விதத்தில், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதமாக சொல்லப்படும் சில விதிகளை சுருக்கமாக்கி, அனைவருக்கும் புரியும்படியாக எளிமையாக தருவதே “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளின் நோக்கம்.
