book

நம் ஆரோக்கியம் நம் கையில்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கு. கணேசன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :239
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

காலை உணவில் விட்டமின், மினரல்ஸ், கார்ப்போஹைட்ரேட்ஸ் கிடைக்கும் டிபன்/சாப்பாடு/பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.
 காய்கறிகளைப் பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.* நீரழிவு நோயாளிகளின் உடலிலுள்ள அதிகபட்ச நீர்ச்சத்தினை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்ஸை எல்லோரும் அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறு. அதற்குப்பதில் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.* சத்துக்கள் நீக்கப்பட்ட கார்ன்ஃப்ளேக்ஸ், கெடுதி தரும் பேக்கரி அயிட்டங்களைத் தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். * `சாப்பிடுகிறேன்... நேரமாச்சு' என அரக்கப்பரக்க அரைகுறையாக சில நிமிடங்களே சாப்பிடுபவர்கள் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிகமான வாய்ப்புண்டு.
* சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினம் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்.