book

நாரதரின் பக்தி சூத்திரம் பாகம் 2

₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :580
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184027693
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

நாரதரின் பக்தி சூத்திரம் "பக்த்யா அனுவ்ருத்யா" என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் பக்தி என்பது உருவம் கொண்டதாக இருக்கவேண்டும்! சூரியலோகத்திலே சூரியனும் உருவம் கொண்டவனாக, உள்ளான். அதே போல பகவானுக்கு ஏன் உருவமில்லை? ஓஷோ, "யார் சொன்னது பகவானுக்கு உருவமில்லை என்று? எல்லா உருவங்களும் அவனுடையவையே. பகவானுக்கு என்று ஒரு உருவம் கிடையாது. நீங்கள் பகவானுடைய உருவத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கள். என்கிற கேள்வி எழுகிறது. ஆகவே அவனுக்கு ஒரு உருவம் ஏன் இல்லை மரத்திலே அவன் மரமாக இருக்கிறான். பறவையிலே பறவையாக இருக்கிறான். அருவியிலே அருவியாக இருக்கிறான். மனிதனிலே மனிதனாக இருக்கிறான். கல்லிலே கல்லாக இருக்கிறான். பூவிலே பூவாக இருக்கிறான். நீங்கள் பகவானுடைய உருவத்தைத் தேடிக் கொண்டிருந்தால் தவறிக் கொண்டே சென்றிடுவீர்கள். எல்லா உருவங்களும் யாருடையதாக இருக்கின்றதோ அவருக்கென்று ஒரு தனி உருவம் இருக்க முடியாது. இது ஒரு சுவையான விஷயம். இதன் பொருள் என்னவென்றால் எல்லா உருவங்களும் யாருடையதோ அவன் தன்னிலே உருவமற்றவனாகத்தானே இருப்பான் ? இது சற்று முரண்பட்டுத் தெரிகிறதல்லவா? எல்லா உருவங்களும் யாருடையதோ அவருக்கென்று ஒரு உருவம் கிடையாது.