book

இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்

Indrum Varam Tharum Yogini Sithargal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்துமதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789393209573
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Out of Stock
Add to Alert List

இந்திய பூமி இயல்பிலேயே ஞானம் தோய்ந்தது. ஆண்களோடு பெண்களும் ஆன்மீக விளக்கு களாக சுடர்விட்ட தேசம். பக்தி யோகத்தில் தலைசிறந்து விளங்கிய 24 யோகினியரின் புனித சரித்திரம் இங்கே விரிகிறது, பிரபல நாவலாசிரியை திருமதி. இந்துமதியின் அழகு தமிழில்! எழுபதுகளில் தமிழில் வெளிவந்த சுயமான படைப்புகளில் பெரிதும் பேசப்பட்டது திருமதி இந்துமதியின் `தரையில் இறங்கும் விமானங்கள்' நாவல். சிலருக்கு நாவலின் தலைப்பு புதிதாய் தோன்றிற்று; படித்த பலருக்கும் நாவல் உணர்த்திய செய்தி மிகப் பிடித்திருந்தது. காதல் மனசில் மலர்ந்த மல்லிகைகளை இதழ் வாடாமல் வாசக மனதிற்கு மாற்றத் தெரிந்த ரஸவாதம் அவருக்குக் கைவந்திருந்தது. இது ஆங்கிலத்திலும் `ளுரசசநனேநசநன னுசநயஅள' என்று கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டு அயல் வாசகர்கள் தமிழை கவனிக்க வைத்தது. தொலைக்காட்சிப் பெட்டியும், செல்லிட பேசியும், இணைய மாய வலையும் இல்லாத அந்நாட்களில் பத்திரிகைகளின் ஆட்சி உச்சத்திலிருந்தது. பலருக்கும் சுலபத்தில் திறக்காத பத்திரிகாலயக் கதவுகள் இந்த எழுத்துக்குயில் சுதந்திரமாக பறக்க வழிவிட்டன. முப்பெரும் பத்திரிகைகளாக இருந்த குமுதம், விகடன், கல்கி இவரது எழுத்துக்களை வெளியிட்டு கௌரவித்தன. அந்நாட்களில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த நாவல்கள்: விரலோடு வீணை, அசோகவனம், வீணையடி நீ எனக்கு, ஆரண்ய வாசம், மலர்களிலே அவள் மல்லிகை மற்றும் தொடுவான மனிதர்கள். அன்றைய படைப்பாளர்களின் பட்டறையாக விளங்கிய `இலக்கியச் சிந்தனை' மாதாந்திர நிகழ்வுகளில் தவறாது பங்கெடுத்தவர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி நவீன தமிழ் இலக்கிய வரலாறு மறக்க முடியாத பெயர்: இந்துமதி. - பதிப்பாசிரியர்