book

மதுவிலக்கு நேற்று இன்று நாளை

Mathuvilakku Netru Indru Nalai

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. செங்குட்டுவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184936605
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்று நன்கு தெரிந்திருந்தும் மது அருந்தும் வழக்கத்தை விடமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். நிலைமையை மேலும் மோசமாக்கும்படி, அரசே மது விற்பனையைத் தலைமையேற்றி நடத்தி வருதோடு அதைப் பெரிதும் ஊக்குவித்தும் வருகிறது. இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள், காலம் காலமாகத் தமிழர்கள் மதுவைச் சுவைத்துக்கொண்டுதானே இருந்திருக்கிறார்கள் என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது உண்மையா? வேத காலம்முதலே மது அருந்தும் வழக்கம் இருந்திருக்கிறதா? சங்க இலக்கியங்கள் மதுவைக் கொண்டாடியிருக்கின்றனவா? எனில், தமிழர்களின் பண்பாட்டோடும் கலாசாரத்தோடும் மது பின்னிப் பிணைந்திருக்கிறதா? அதனால்தான் மதுவை இன்றுவரை நம்மால் ஒழிக்கமுடியவில்லையா? கோ. செங்குட்டுவனின் இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடையளிப்பதோடு ஒரு முக்கியமான உண்மையையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. மதுவை ஆதரிக்கும் குரல்களுக்குச் சற்றும் குறைவில்லாதவை மதுவுக்கு எதிரான குரல்கள். சங்க இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள் தொடங்கி சமகால பத்திரிகை, மேடை நாடகம், திரைப்படம், நாவல், அரசியல் மேடை என்று எல்லாவிதமான ஊடகங்களையும் பயன்படுத்தி மதுவிலக்கு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ராஜாஜி, பெரியார், மபொசி, அண்ணா என்று மாபெரும் ஆளுமைகள் மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கிறார்கள் அதே சமயம் மதுவிலக்கை முன்வைத்து அரசியல் களம் அன்று தொடங்கி இன்றுவரை கடும் தள்ளாட்டத்தில் இருந்துவருவதையும் அதற்கான பின்னணி காரணங்களையும் இந்நூல் காட்சிப்படுத்துகிறது.