book

திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. 
 
ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.                                                                                                                                                                                               
எழுத்தாளர் பற்றி: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.