book

இந்திராகாந்தி

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை ஆ. கணபதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430119
Out of Stock
Add to Alert List

பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் மகள், நாட்டின் முதல் பெண் பிரதமர், கிழக்கு பாகிஸ்தான் பகுதி வங்க தேசம் என்னும் தனிநாடாக உருவாக காரணமானவர், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியவர், பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியவர், காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கியவர், இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுக்கு வித்திட்டு, இந்திரா காங்கிரஸ் ஆக கட்சியை உருவாக்கியவர் என பல்வேறு பலமும், பலவீனமும் கொண்ட மாபெரும் தலைவராக விளங்கியவர் இந்திரா காந்தி என்றால் மிகையல்ல.


 நாட்டை கட்டமைப்பதில் இவர் மேற்கொண்ட சிரத்தையை எப்போதும் நடுநிலையாளர்கள் மனதார பாராட்டுவதே இவருக்கு கிடைத்த நற்சான்று. குறிப்பாக வங்கிகளை நாட்டு உடமையாக்கியதன் மூலம் செல்வந்தர்கள், பெரும் வசதி படைத்தவர்கள்தான் வங்கிச் சேவையை பயன்படுத்த முடியும் என்ற மாயையினை உடைத்தவர் இந்திரா.