திருஞானசம்பந்தர் வரலாறு
Thirugnanasambandar Varalaru
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.சு. பிள்ளை
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :168
பதிப்பு :3
Published on :2018
Out of StockAdd to Alert List
தனக்கு
நன்மை நாடுவதினும் பிறர்க்கு நன்மை செய்வதே அறமென்று சிறப்பாக
அழைக்கப்படும். பிறர்க்குச் செய்யும் நன்மை காரணமாகவே உயர்வும் மதிப்பும்
மக்கட்கு ஏற்படுகின்றன. குழந்தைகளைப் பாதுகாத்து வளர்த்தலினாலே தாய்க்குச்
சிறப்புக் கூறப்படுகின்றது. அவர்கட்கு அறிவூட்டுவதனாலே தந்தைக்குப் புகழும்
புண்ணியமும் விளைகின்றன. இளைஞர்க்கு உற்றுழி உதவுதலானும், வறிஞர்க்கு
வேண்டுவன ஈதலானுஞ் செல்வர்க்குச் சிறப்பு ஏற்படுகின்றது. கல்வி
கற்பித்தலினாற் கற்றவர்க்கு மேன்மை யுண்டாகின்றது. நாட்டில் வாழும் குடிகளை
உட்பகை புறப்பகை முதலியவற்றால் நலிவடையாமற் காத்து ஓம்புதலினாலே
வேந்தர்க்குப் பெரும் பெற்றி நிலைக்கின்றது. சமய அறிவினையும் சமய
ஒழுக்கத்தினையும் நிலைபெறச் செய்வதினாலே சமய ஆசிரியர்கட்குப் பெருஞ்
சிறப்பு அமைந்துளது. இதனால் பிறர்க்கு உதவியாகிய அறமே சால்பு அனைத்திற்கும்
அடிப்படையாக உள்ளது.