book

ஈழம் அமையும்

Eelam Amaiyum

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அய்யநாதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384149116
Out of Stock
Add to Alert List

சர்வதேச சமூகம் சதி செய்தது. காப்பாற்றியிருக்க வேண்டிய இந்தியா குழி பறித்தது. தாயகத் தமிழகம் மண்ணைப் போட்டு மூடியது. ஈழம் புதைக்கப்பட்டு விட்டிருக்கிறது.

ஆம், சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திரைமறைவு நாடகங்கள் எப்படி அரங்கேறின என்பதை இந்த நூல் விரிவாக விளக்குகிறது.

விரிவான வரலாற்றுப் பின்னணி, அழுத்தமான அரசியல் ஆதாரங்கள், நியாயமான தர்க்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஈழப் போராட்டம் சிதைக்கப்பட்ட விதத்தை இந்தப் புத்தகத்தில் அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர் கா. அய்யநாதன்.

*இந்திய அதிகாரவர்க்கத்தின் தமிழர் விரோத மனப்பான்மை, சீனா, அமெரிக்காவின் ராணுவ பொருளாதார நோக்கங்கள், ஐ.நா சபையின் அலட்சிய மனோபாவம் என ஒட்டு மொத்த உலகமும் ஒன்று சேர்ந்து பின்னிய சதி வலையில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சிக்கிச் சின்னாபின்னமாகிவிட்டிருக்கிறது. அந்த சோக வரலாற்றின் அரசியல் காய் நகர்த்தல்களை வெகு துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் கா. அய்யநாதன்.

*இலங்கைப் போரைப் பற்றிய உலக அளவில் வெளியான தகவல்களில் இருந்து திரைமறைவில் நடந்த உள் அரங்கத் தகவல்கள்-வரை அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு நூலாசிரியருக்கு தமிழ் வெப் துனியா எடிட்டராக இருந்தபோது கிடைத்தது. அவற்றையே இந்த நூலில் தொகுத்தளித்திருக்கிறார்.

*ஈழத்தில் நடந்தது தமிழின அழிப்பு மட்டுமல்ல... ஒட்டு மொத்த மானுட இனத்துக்கே எதிரான அராஜகம். ஈழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் சிந்திய கண்ணீரும் ரத்தமும் செய்த தியாகமும் காட்டிய வீரமும் இன்று தோற்றதுபோல் தோன்றலாம். ஆனால், இறையருளால் நிச்சயம் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் நூலாசிரியர் புத்தகத்தை முடித்திருக்கிறார்.