book

குறி அறுத்தேன்

Kuri Aruthaen

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருநங்கை கல்கி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184766301
Out of Stock
Add to Alert List

திருநங்கை கல்கி சமூக செயற்பாட்டாளர். முகநூலில் கவி எழுதி வந்த அவரின் முதல் முயற்சி குறி அறுத்தேன் கவிதை நூல். வலிகள் மட்டுமே நிரம்பிய திருநங்கையரின் வாழ்வில் புன்னகையை நிரந்தரமாக்க வரம் கேட்கிறார் கல்கி. இவர் மாகாளியிடம் கேட்கும் வரங்கள் மகாகவி பாரதியின் பிரதிபலிப்பாக உள்ளது. விதியற்று வீதியோரம் நிற்கும் திருநங்கைகளின் முடையும் வாழ்வை அக்கறையோடு பார்க்கும் பார்வையில் கல்கி ஒரு சகோதரியாக மிளிர்கிறார். மனம் கொத்தாத மனிதரையும், உடல் கொத்தாத உன்னதத்தையும் தேடும் கல்கியின் வரிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தத்தை சொல்கின்றன. மூன்றாம் பாலினமாக பார்க்கப்படும் திருநங்கைகளின் குரலாக, அவலங்களை துகிலுரிக்கும் சமூக விழிப்பாக, அரிதினும் அரிதான வரிகளை, அர்த்தமுள்ள வரிகளை எழுதிக் குவித்திருக்கிறார் கல்கி. அவரது வரிகள்... சாட்டையாய்... கொள்ளிக்கட்டையாய்... பக்கத்தைப் புரட்டுங்கள். திருநங்கைகளின் உணர்வை உணருங்கள்