book

கர்பத்தடை முறைகளும் ஹோமியோவும்

₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. S. தொரியா ரோச்
பதிப்பகம் :கிரிஜா பதிப்பகம்
Publisher :Kirija Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

தமிழ் மொழியில் பிற மருத்துவ முறைகள் பெருமளவில் வளர்ச்சி பெற்று, தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு நேரிடையாக நன்மை செய்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, ஹோமியோபதி மருத்துவம் ஜெர்மன் நாட்டில் தோன்றியிருந்தாலும், உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகள் கடந்து, பல்வேறு மதம்- இனங்களைக் கடந்து, பல்வேறு மொழிகளைக் கடந்து இன்றைய நிலையில் அது மக்கள் மருத்துவமாக மலர்ந்திருக்கிறது.தமிழகத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோமியோபதி மருத்துவம் அறிமுகமானதிலிருந்து இன்று வரை, தமிழ்மொழியோடு பின்னிப் பிணைந்தே வளர்ந்திருக்கிறது. ஒப்பிட்டளவில் பாமர மக்கள் முதற் கொண்டு பண்டிதர்கள் வரை ஹோமியோபதி மருத்துவ முறையை தமிழ் மொழியின் மூலமாகத்தான் கற்றறிந்தார்கள் என்பது உண்மை. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏராளமான ஹோமியோபதி பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்தப் பயிற்சி நிறுவனங்களிலும், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ நூல்களைக் கொண்டுதான் வகுப்புகள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.