book

ஆன்மிக அமுதம்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. சம்பத்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

மிகப் பெரிய பூஜைகள் வேண்டாம். உடலை வருத்திச் செய்யும் எந்தத் தவமும் தேவையில்லை. இரண்டு கொத்து அறுகம்புல்லை எடுத்து பிள்ளையாரின் திருவடிகளில் போட்டாலே போதும்! குளிர்ந்து அருளும் தயாபரன் அவர். பக்தர்கள் தங்கள் ஆசைக்கு ஆயிரம் திருப்பெயர்கள் இட்டு வணங்குவதும் இவருக்குத்தான். அப்படித்தான் இவருக்கு கரும்பாயிரம் என்றும் பெயர் வைத்தார்கள்!!
எதைத் தொடங்கினாலும், விநாயகரை வணங்கித் தொடர்ந்தால் காரியம் நிறைவேறுவது சகஜமானது. அதுபோல இந்த ஆலயத்திற்குச் செய்யும் சேவை சிறு புல் அளவாக இருந்தாலும் சரி, வண்டி வண்டியாக திருப்பிக் கொட்டிக் கொடுத்து விடும் வள்ளல் இவர்!
திருக்குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையான கரும்பாயிரம் பிள்ளையார் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு அளித்திட ஆர்வத்துடன் காத்திருக்கிறார். பக்தர்களின் வாழ்வை அடிக்கரும்பு இனிப்பாக மாற்றிடத் திருவுளம் கொண்டுள்ளார்.