book

நலம் தரும் யோக முத்திரைகள்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

‘நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததே மனித உடலும் என்கிறது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள். உடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார்
அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்னை உருவாவதைத் தடுக்கவும், பிரச்னை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.

குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள். நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’ என்கிற இயற்கை மற்றும் யோகா மருத்துவர் இந்திரா தேவி, முத்திரைகளின் வகைகளையும், அதன் பலன்களையும் இங்கே விளக்குகிறார்.

முத்திரை பயிற்சி செய்யும் முன்...

முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது..