book

உனக்கு பின்னால் உலகம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நன்னம்பிக்கை நம்பி
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

 பெற்ற பிள்ளைகளும், கைநிறைய சம்பளாம் கொடுத்து வேலைக்கு வைத்தவர்களும்கூட நம் பேச்சை முழு மனத்தோடு கேட்டு மதிக்காத இந்தக் காலத்தில், ஒட்டுமொத்தமாக உலகமும் நம் பின்னால் ஓடிவரும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? போகட்டும். உலகையே வெல்வேன் என்று கொக்கரித்த மகா அலெக்ஸாண்டர், மாவீரன் நெப்போலியன் சர்வாதிகாரி ஹிட்லர் போன்றவர்களின் கதி என்னாச்சு?

v  வயிற்றையும் வாயையும் கட்டி கொஞ்சம் பணம் சேர்த்து இப்போதுதான் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ளேன். அத விட்டுட்டு ரிஸ்க் எடுக்க முடியுமா?

v  ரொம்பநாள் கழிச்சி இப்பதான் நான் நினைச்ச பதவி கிடைச்சிருக்கு, இந்த சான்ஸ நழுவ விடலாமா?

எல்லாவித திறமைகளும் இருந்தும், நம்பிக்கை என்ற பற்றுக்கோடு இல்லாமல் இப்படிக் கேள்வி கேட்ட்டுக்கொண்டு ஒரு கூட்டுக்குள் முடங்கிப் போனவர்களுக்கும், நம்பிக்கை இருக்கிறது ஆனால் சாதிக்கும் வழி தெரியவில்லை என்று தவிப்பவர்களுக்கும் நல்லதொரு வழியைக் காண்பிக்கிறது இந்தப் புத்தகம்.