
ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381975114
Out of StockAdd to Alert List
இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்கும் பயணியான சாமியார். என்னை அவன் பார்த்துப்பான்...என்கிறார்“. உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க கடமை என்கிறார் காவல் துறை அதிகாரி. சாமியாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துதான் இந்தப் பாதுகாப்பு. போதாக்குறைக்கு நடுவழியில் வண்டி நிறுத்தப்படுகிறது. பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதான்யா இவங்ககிட்ட...எதையுமே முதல்லவே பார்க்க மாட்டாங்க. வண்டில குண்டு இருக்காம்...உயிர் போனாப் பரவால்லயா... வாய் மூடிக் கொள்கிறது எல்லோருக்கும். ஒரே பரபரப்பு. தேடு தேடு என்று தேடுகிறார்கள். ஒரு பை அகப்படுகிறது. உள்ளே டிக் டிக் சத்தம் வேறு. எங்கேயாவது நீளக் கம்பு கிடைக்குமா? கம்பால நுனில தூக்கித் தள்ளி வச்சிட்டு ஓடிப்போயிடலாமே
