book

வேதாளம் சொன்ன புதிர்க்கதைகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி. தெய்வசிகாமணி
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

முருங்கைமர வேதாளம் 27 ഷണ யிருக்கின்றன. ஒரு முனிவருடைய வேண்டுகோளின் படி விக்கிரமாதித்தன் முருங்கை மரமொன்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த அந்த வேதாளத்தைக் க ட் டி த் துாக்கிக்கொண்டு வருவாளும், வேதாளம் ஒரு சிக்கலான புதிர்க்கதை யொன்றைச் சொல்லி அதை விடுவிக்கும்படி அவனிடம் கேட்குமாம். அவன் தகுந்த விடை கூறுவதைக் கேட்டுக் கொண்டே அந்த வேதாளம் எப்படியோ தந்திரமாகக் கட்டவிழ்த்துக்கொண்டு ஒடிப் போய் முன்னிருந்தவாறே முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளுமாம். இந்தக் கதையிலிருந்துதான், 'பழையபடி வேதாளம் முருக்கமர மேறிக் கொண்டது” என்ற வ்ாக்கியம் தோன்றியிருக்கிறது. பொதுவாக அனைவருக்கும் ஒவ்வாத ஏதாவதொரு எண்ணத்தையோ செயலையோ மறுபடியும் மறு படியும் விடாது கடைப்பிடிக்கிறவனைப் பார்த்து அப்படிச் சொல்வதுண்டு. விக்கிரமாதித்தன் பிடித்துவர முயன்ற வேதா ளத்தைப் போல எத்தனையோ வேதாளங்கள் இன்றும் இருக்கின்றன. மனிதன் அவற்றைக் கட்டிப் பிடித்து அடக்க எவ்வளவு முயன்ருலும், கொஞ்சம் ஏமாந்தால் அவை தப்பித்துக்கொண்டு போய் விடும்; பழையபடி முருக்க மரம் ஏறிக்கொள்ளும். இந்த வேதாளங்கள் வேறெங்குமில்லை. மனித னுடைய உள்ளத்துக்குள்ளேயே இருக்கின்றன. மனிதன் தன்னுடைய நல்லுணர்வினலே அவற்றைக் கட்டிப்பிடித்து அடக்கி ஆள முயல்கிருன்; ஆனல் அவனுடைய பிடி பல சமயங்களில் தளர்ந்து