இளைஞர் கம்பராமாயணம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரஸ்வதி ராம்நாத்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :336
பதிப்பு :7
Published on :2013
Out of StockAdd to Alert List
பற்றி எரிந்த நகரை மயன் என்னும் தெய்வத் தச்சன் பொலிவுடைய மாநகராக ஆக்கிப் புதுப்பித் தான்; மாணிக்கத் துண்கள் அமைந்த மணிமண்டபத் தில் சிம்மாசனத்தில் இராவணன் கொலு வீற்றிருந்தான்.
வரம்பறு சுற்றமும், மந்திரத் தொழில் நிரம்பிய அமைச்சரும், சேனைத் தலைவரும் அவன் அவைக் கண் அமர்ந்தனர். அரம்பை மாதர் கவரி வீசி அவனைச் சுகப்படுத்தினர். அடுத்து நடக்க வேண்டியதைத் தொடுத்துச் சிந்திப்பதற்குச் சற்று அயலானவரை வெளிப்படுத்தி, நெருங்கிய சுற்றத்தினரையும், அமைச்சரையும், உடன் பிறந்த தம்பியரையும் மட்டுமே நிறுத்திக் கொண்டான்.
“சுட்டது குரங்கு, கெட்டது கடி நகர்; பட்டனர் சுற்றமும் நட்பும்; கிட்டியது இழிவும் பழியும்; அழிவு செய்த அனுமன், சென்றவழி தெரியாமல் தப்பி விட்டான். இனிச் செய்யத் தக்கது யாது; “” என்ற வினாவை எழுப்பினான் இராவணன்.
“கரன் சிரத்தை இழந்தான்; சூர்ப்பனகை செவியையும் மூக்கையும் இழந்தாள்; வீரர் மனைவியர் தாலியை இழந்தனர்; சித்திர நகர் எழிலை இழந்தது; நாம் மானத்தையும் புகழையும் இழந்தோம்” என்று இழப்புகளை அடுக்கிக் கூறினான்.
மகேந்திரன், துன்முகன், பிசாசன் முதலிய படைத் தலைவர் நாடக வசனம் பேசினர்: “படை எழுப்பி எதிரிகளைத் துடைப்பதுதான் செய்யத் தக்கது” என்ற கருத்தைச் சொல்லின