book

எண்ணங்கள் மாறலாம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ர.சு. நல்லபெருமாள்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :316
பதிப்பு :1
Add to Cart

சிலவற்றைப் பற்றிச் சில சிந்தனைகள்: வேறு எந்தத் துறையிலும் தெய்விகம் காணப்படா விட்டாலும் காதல் துறையில் மட்டும் தெய்விகம் மிகுதியாக அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் சீரழிக் கப்படுவது தெய்விகமா அல்லது காதலா? சிலர், "காதல் தான் தெய்விகம், அவை இரண்டும் இரண்டறக் கலந் திருக்கும்' என்று அழுத்தமாகக் கூறிக்கொண்டு திரிவதை யும் பார்க்கிறோம். 'காதல்' என்னும் சொல்லைத்தான் என்ன பாடுபடுத்தி யிருக்கிறார்கள்! கதையில், கவிதையில், கட்டுரையில் இந்தச் சொல் எவ்வளவு ரம்மியமாகக் கையாளப்பட்டிருக் கிறது! காளிதாசன் முதல் சினிமாதாசர்கள்வரை காதலை எப்படியெல்லாமோ கையாண்டுவிட்டார்கள். காளிதாசன் பெருமைப்படுத்தினான்; சினிமாதாசன் அசிங்கப்படுத்தி னான். இப்படிப் பெருமையும் சிறுமையும் அடைந்துகொண் டிருக்கும் இந்தக் காதலைப்பற்றிய வரலாற்றை ஓரளவா வது தெரிந்துகொள்ள வேண்டாமா? காதல் எப்போது ஏற்படுகிறது? எப்படி ஏற்படுகிறது? ஏன் ஏற்படுகிறது? இந்த முறையில் சிந்தித்துப் பார்த்தால் இதன் அடிப்படையே உடலின் ஓர் உணர்வுதான் என்பது புலனாகிவிடும்.