book

உயிரில் கலந்த உறவே

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌவுந்தர்ராஜன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :3
Published on :2013
Out of Stock
Add to Alert List

றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் அமர்வதும் பறப்பதுமாக இருந்த பொன்மாலைப் பொழுது. மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த கந்தசஷ்டி கவசம். குழந்தைகளின் குதூகலம். கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு.
கடற்கரை காற்று உற்சாகமாக வந்து ஸ்ரீராமின் அடர்ந்த கேசத்தைக் கலைத்து விளையாட்டு காட்டியது.
ஸ்ரீராம் கண்மூடி அந்தக் காற்றை ரசித்துச் சிலிர்த்தான். இயற்கை எவ்வளவு அற்புதம்! வாவ்! எவ்வளவு அழகு இந்தக் கடல். பசுமையும் நீலமும் கலந்தாற்போல் என்னவொரு நிறம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகு. கடல் ஒரு அற்புத அதிசயம்தான்.
“டேய்! ஸ்ரீ! வரவர உன்னோட நிலைமை ரொம்ப மோசமாயிட்டே போகுது. எங்கே போனாலும் இயற்கையோடயே ஒன்றிப் போயிடற. போற போக்க பாத்தா அடுத்த வாரம் ஓப்பன் பண்ற உன்னோட ஹாஸ்பிடல்ல நீதான் முதல் பேஷன்டா இருப்பன்னு தோணுது” கடல் இரைச்சலை மீறிச் சத்தமாகச் சொல்லிச் சிரித்தான் விஷ்ணு.
“டேய்! அவனை என்ன உன்னை மாதிரி, வருஷா வருஷம் கோட் அடிச்சவன்னு நினைச்சியா. ஹீ இஸ் ஏ பேமஸ் டாக்டர் ஸ்ரீராம். பெரிய மனோதத்துவ நிபுணர். அதுவும் அமெரிக்கன் ரிட்டர்ன்ட். நீ இந்த திருச்செந்தூரைத் தாண்டியிருப்பியா? அவன் அப்படி ஆழ்ந்து ரசிச்சா அதில ஏதாவது ஒரு காரணம் இருக்கும். இப்ப பார்க்கிறதை எல்லாம் மனசில குறிப்பெடுத்து வச்சிட்டு ஏதாவது ஒரு பேஷன்டுக்கு தேவைப்படும் போது சொல்லுவான். அதெல்லாம் நம்மை மாதிரி சாதாரண ஆட்களுக்குப் புரியாது. இயற்கையை ரசிக்கிறது தப்பில்லை. இப்ப நீ ரசிச்சுட்டு இருக்கியே இது தப்பு” - என்றவாறு அவன் தலையில் குட்டியவாறே அவனது கையில் இருந்த கையடக்க வீடியோ கேமராவைப் பறித்தான் சிவா.
படமாகி இருந்ததைப் பார்த்துவிட்டு “அடப்பாவி” கோவில்ல வந்து கடல்ல கால் நனைக்கிற பெண்களையா இவ்ளோ நேரம் கவரேஜ் பண்ணிட்டிருந்தே. இடியட். இடியட். ஏன்டா உனக்கு இப்படியெல்லாம் புத்தி போகுது. ச்சே! டேய் ஸ்ரீ இவனை முதல்ல உன் ஹாஸ்பிடல்ல சேர்த்து இவன் மூளையைப் பெண் பித்துல இருந்து தெளியவைடா. வரவர ரொம்ப ஜொள்ளு விடறான்” என்றவாறு தன் கையிலிருந்த கேமராவை ஸ்ரீராமிடம் காட்டினான் சிவா.
“பார்! இந்த முட்டாள் படம் எடுத்துருக்கிறதை”
ஸ்ரீராம் கண்கள் அந்த சிறிய டி.வி. திரையை அசுவாரஸ்யமாய் நோட்டமிட்டது.
யாரும் தங்களைப் பார்ப்பதில்லை என்ற எண்ணத்தில் சுதந்திரத்தில் கடல் அலை தந்த உற்சாகத்தில் பெண்கள் கூட்டம் தங்கள் புடவையை முழங்கால் வரை உயர்த்திப் பிடித்திருந்தபடி கடல் நீரில் ஆட்டம் போட அதை அப்படியே படமாகப் பிடித்திருந்தான். கண்கள் கோபத்தில் சிவக்க, “யூ! டாமிட் இதுக்குத்தான் இவனை இந்த டூருக்குக் கூப்பிட வேண்டாம்னு சொன்னேன். எங்கே அந்த திலீப்? டேய் திலீப் வெளியே வாடா போலாம்” விருட்டென எழுந்தவன் கடல் அலையில் உற்சாகக் குளியல் போட்டுக்கொண்டு இருந்த திலீப்பைப் பார்த்து உரக்கக் குரல் கொடுத்தான்.
“ப்ளீஸ். ஸ்ரீ! இன்னும் ஒரு டென் மினிட்ஸ்” என்றவன் அதற்கு மேல் திரும்பாமல் மீண்டும் அலையோடு மிதக்க ஆரம்பித்தான்.
“ஓ.கே. நீங்க இருந்துட்டு வாங்க. நான் ரூமுக்குப் போறேன். இன்னிக்கு நைட்டே சென்னைக்குக் கிளம்பலாம்னு இருக்கேன்” பொதுவாகப் பேசியவாறு நடக்க ஆரம்பித்தவனை வேகமாகச் சென்று வழிமறித்தான் விஷ்ணு.
“டேய்! சாரிடா மச்சான். சும்மா விளையாட்டுத்தனமா பண்ணிட்டேன்டா. ஸாரிடா. இனிமே சமர்த்தா இருக்கேன். இன்னும் ஒரு நாள் தானே. அந்த ஒரு நாளும் நமக்குள்ள எந்தப் பிரச்சனையும் வந்திடக்கூடாதுடா. ஸோ ஸாரி. இனிமே இந்த கேமராவை டூர் முடியறவரைக்கும் நான் தொடமாட்டேன். இந்தா நீயே வெச்சிக்க, ஊருக்குப் போகும் போது தா. இந்தா பிடி” - ஸ்ரீராமின் கைகளில் அந்த வீடியோ சாதனத்தைத் திணித்தான்.
“ஆனா! கோவிச்சிட்டுப் பேசாம மட்டும் இருந்திடாதடா ஸ்ரீ” குரல் கம்மியது விஷ்ணுவிற்கு.
லேசாக சிரித்த ஸ்ரீ “டேய்! நாமெல்லாம் படிச்சவங்க. அதுவும் கோவில்ல வந்து, நாமளே இப்படி இன்டீஸன்டாக நடந்துக்கலாமா? சரி நீ போய் குளி. நான் உட்கார்றேன்” - என்றவனை அந்தக் கிண்கிணிச் சிரிப்பொலி தொட்டுத் திருப்பியது.