
மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என். வரதராஜன்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பாலபாரதி
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் யின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.
வரதராஜன் ஒரு பஞ்சாலைத் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி,
தொழிற்சங்கவாதியாக அரசியலில் காலடி பதித்தவர். அதனால்தானோ என்னவோ,
அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும், தொண்டர்களின் உணர்வுகளையும் அவரால்
ஒருசேரப் பிரதிபலிக்க முடிகிறது. எளிமைக்கு பெயர் பெற்ற என். வரதராஜனைப்
பொறுத்தவரை அவரை வெளியுலகம் தெரிந்து கொண்டது அவரது சட்டமன்ற செயல்பாடுகள்
மூலமாகத்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தற்பொழுது
உயிர்த்துடிப்புடன் காணப்படுவதற்கு தோழர் என். வரதராஜனின் அணுகுமுறையும்
ஒரு காரணம். எந்தவொரு மக்கள் பிரச்சனையாக இருந்தாலும், தானே போராட்டத்தை
முன்னின்று நடத்தும் இவரது ஆர்வம், அவரது கட்சி இளைஞர்களுக்கு
உற்சாகத்தையும், இடதுசாரி இயக்கத்துக்கு எழுச்சியையும்
ஏற்படுத்தியிருக்கிறது.
