book

அரசியல் ஆத்திசூடி (அரசியல் நேர்மை மலரட்டும்)

₹380+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ. வெள்ளையப்பன்
பதிப்பகம் :திருமறை பதிப்பகம்
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :444
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789355934741
Add to Cart

ஒற்றை வரியில் அறக்கருத்துகளை உள்வைத்து, அகர வரிசையில் பொதுமைக் கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். பழந்தமிழ் நுாலான ஆத்திசூடி போன்ற ஒற்றை வரிகள், பாமரரும் புரிந்து படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ‘அரசியல் நேர்மையே அரசுக்குப் பெருமை, சிரிப்புடன் சிறைபுகல் சிரிப்பு கிடந்தரும்’ போன்று, 82 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. லஞ்ச, ஊழல் அரசியல்வாதிகளை நோக்கிய சாடல், பதவிப்பசி அரசியல்வாதிகள் மீதான கண்டனம், நாட்டுப் பற்று, ஜாதி சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு, தீண்டாமை, பொதுவெளியில் துாய்மை காத்தல், பிணியிலிருந்து காத்தல், குழந்தை நலனை முன்வைத்துள்ளது. அரசு இயந்திரம், நீதித் துறை சிறப்பாக இயங்கும் வகையிலான மையக் கருத்தை பற்றிய கட்டுரைகள் கவனத்தை ஈர்க்கின்றன. நன்னெறிக் கருத்துகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு