செவிச் செல்வம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.வி.வி. ஆனந்தம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2013
Add to Cartதிருக்குறள் வாழ்க்கை நடத்த இயலும். அதனால் 'விலங்கொடு அணையர் மக்கள்’’ என்றார். இந்தப் பொதுவிதிக்கு விலக்கு உண்டு என்பது வரலாறு தரும் செய்தி. அதாவது விலங்குகளிலும் கீழாக வாழ்பவர்களும் உண்டு. 410. 42. கேள்வி அறிவைப் பெறும் வாயில்களில் கேள்வி ஒன்று. அஃதாவது அறிந்தாரிடம் கேட்டறிவது கல்வி வாயிலாக அறிவைப் பெறும் முயற்சியை விட, கேள்வி வாயிலாக அறிவை எளிதில் பெறலாம். அளவிலும் கூடுதலாகப் பெறலாம். ஆனால் நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவில் ஏற்படும் குறைகளைவிட கேள்வியில் குறைகள் கூடுதலாக வாய்ப்புண்டு. ஏன்? யாரிடம் கேட்கின்றோமோ அல்லது நமது செவிப்புலனுக்குச் செய்திகளைக் கொண்டு வருபவர் யாரோ அவரைப் பொருத்துக் கேள்வியின் தரம் இருக்கும். கல்வியைப் போல அறிவு பெறுவதற்குரிய வாயிலாகவும் அதைவிடச் சிறப்புடைய வாயிலாகவும் இருப்பதினால் கல்வியின் பின் கூறப் பெற்றது. 41. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. செல்வங்களுள் செல்வம் கேள்வியறிவுச் செல்வம். கேள்வியறிவாகிய செல்வம் மற்ற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையாயது. பொதுவாக, மக்கள் அறிவுச் செல்வத்தை மண், பொன் போலக் செல்வமாக மதிப்பதில்லை. அதனால், முதலில் மக்கள் மதிக்கும் செல்வங்களின் பட்டியலில் கேள்வியறிவுச் செல்வத்தைச் சேர்ப்பதற்காகச் “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்றார்