book

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ச.ஞானசம்பந்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :357
பதிப்பு :7
Published on :2018
Out of Stock
Add to Alert List

தமிழ்த் தென்றல் அவர்கள் கூறி நாற்பத்தொன்பது ஆண்டுகள் கழித்து திடீரென்று சில எண்ணங்கள் மனத்தில் தோன்றலாயின. இந்த எண்ணங்களும், அவற்றைத் தோற்று விக்கும் திருவாசக அடிகளும் அடிக்கடி படம்போல் மனத்தில் தோன்றி மறைந்தன. திருவாசக அடிகள் இந்த எண்ணங்களைத் தோற்றுவித்தன என்பது உண்மைதான். ஆனால் அச்சொற்கள், அவை குறிக்கும் பொருள்கள் என்பவை நேரடியாக இவ் எண்ணங்களைத் தோற்றுவிக்க வில்லை. அதன் மறுதலையாக, அச்சொற்கள் குறிப்புப் பொருளாக (suggestion) இவ் எண்ணங்களைத் தோற்று வித்தன. அவ் எண்ணங்களுக்குக் கோவையாக ஒரு வடிவு கொடுக்கும் ஆற்றல் என்பாலில்லை. எனவே, சில அடிகளைப் படித்தவுடன் அத் தொடர்கள் என் மனத்தில் என்ன எண்ணங்களைத் தோற்றுவித்தனவோ அவற்றை அப்படியே கூறியுள்ளேன். இவ்வாறு சொல்வதற்குத் தொல்காப்பியத்தில் வரும் ‘இறைச்சி' என்ற சொல் வலிவு தந்தது.