book

அறிவுரைக் கொத்து

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலை அடிகள்
பதிப்பகம் :மணிவாசகர் பதிப்பகம்
Publisher :Manivasagar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

'சைவ சமயம்' என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிர ஆண்டு களுக்கு முன்னேதொன்றுதொட்டுக் கைக்கொள்ளப்பட்ட கடவுட் கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச் செய்து, மற்றை நாட்டவர்க்கு இல்லாத் தனிப்பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக்கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது.
அது, தமிழ் நன்மக்களை அறிவில் மேம்பட்டு விளங்கச் செய்தது எப்படியென்றால், கூறுதும்: இந்நிலவுலகத்தில் எங்கும் உள்ள எல்லா மக்களும், அவர்கள் நாகரிகத்திற் சிறந்திருப்பினும் நாகரிகம் இல்லாக் காட்டு வாழ்க்கையிலிருப்பினும், எல்லாருங் 'கடவுள் ஒருவர் உண்டு' என்னும் உணர்ச்சியும் அக்கடவுளை வணங்கும் விருப்பமும் உடையராய் இருக்கின்றனர். மக்கட் பிரிவினர் எல்லார் வரலாறுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து வரலாற்று நூல்கள் எழுதியிருக்கும் ஆங்கில ஆசிரியர்கள், 'கடவுளுணர்ச்சியில்லாத ஒரு மக்கட் கூட்டத்தாரை ஓரிடத்துங் காண்டல் இயலாது' என்று முடிவுகட்டிச் சொல்லுகின்றார்கள்.