book

வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிலம்பு நா. செல்வராசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :46
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423869
Out of Stock
Add to Alert List

உலக வரலாற்றில் இயற்கை, இயற்கைச் சார்ந்த சமூக இயல்புகளை பல்வேறு கோணத்தில் சமூகவியலாளர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இயற்கை, சமூகம் பற்றி பல்லாயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பி அதற்கான விடையையும் கண்டு விளக்கினர். அவற்றுள் மாரக்ஸின் அரசியல் பொருளாதார ஆய்வான வரலாற்று விஞ்ஞான இயங்கியல் பொருள் முதல் வாதம் உலகெங்கும் பல்வேறு சிக்கல்களுக்கு விடை தந்தது என்றே சொல்லலாம்.

15, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரான ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியும், உற்பத்திக் கருவிகளின் கண்டுபிடிப்பும் பல்வேறு புதியதொரு தேடலை தொடங்க வைத்தது. வாணிபத்திற்கான நோக்கமும், இயற்கை, இயற்கைசார் பொருட்களை ஆராயும் வேட்கையும் கடல்வழி பயணத்தை மேலும் தீவிரப்படுத்தின. அதன் மூலம் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கின. ஒவ்வொரு துறையும் தனித்த தன்மையில் அதிவேகமாய் வளரத் தொடங்கின.புராதன காலத்தில் மக்கள் ஒருவரையொருவர் சுரண்டாமலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். எல்லோரும் அக்காலத்தில் பொருளுற்பத்தியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய உழைப்பு உபரிப் பொருட்களைத் தோற்றுவிக்கவில்லை. சிலர் வேலை செய்யாமலேயே ஏனையோரது உழைப்பை உண்டு வாழ்ந்திருந்தால் மற்ற ஏனையோரால் உயிர் வாழவே முடியாமல் போயிருக்கும்