book

அரசு பதில்கள் 1977

₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

ரொடான் என்ற சிற்பியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘சிந்தனையாளன்’,’எண்ணம்’,’முத்தம்’ இவை போன்ற பல அற்புதமானசிற்பங்களைச் செய்த அமரர் அவர். ஒருமுறை, ஃபிரெஞ்சு கதாசிரியர் பல்ஸாக்கின் சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தவர், முடிவுறும் கட்டத்தில், ஒரு நண்பரைக் கூப்பிட்டுக் காட்டினார். அந்த மனிதர் சிலையை வெகுவாகப் புகழ்ந்து விட்டு, “எல்லாவற்றுக்கும் மேலாக பாஸ்லாக் கைகளை வைத்திருக்கும் விதம் மிக நன்றாக இருக்கிறது” என்று சொல்லிச் சென்றார். பிறகு இன்னொரு ரசிகரை அழைத்துக் காண்பித்தார். அவருக்கும் ஒரே மகிழ்ச்சி. “இவ்வளவு இயற்கையாக எந்தச் சிற்பியுமே கைகளை வடித்ததில்லை” என்று பாராட்டினார். வந்து பார்த்த எல்லாருமே, “இந்தக் கைகள்! அபாரம்!” என்றார்கள்.

 ரொடான் ஒரு சுத்தியலை எடுத்து பால்ஸாக் சிலையின் கைகளை உடைத்துத் தள்ளினார். அவர் சொன்ன நியாயம், ‘கை என்பது ஒரு உறுப்பு. அது உறுப்பாகத்தான் இருக்க வேண்டும். மொத்த உருவத்தை மறக்கடிக்கும் அளவுக்குத் தனி சிறப்போடு அது அமைந்து விடுவது நல்ல சிற்பத்துக்கு லட்சணமாகாது’ ஒவ்வொரு வாரமும் இப்படி ஒரு ரத்தின பதில் கட்டாயம் இருக்கும்.