book

மாக்ஸிம் கார்க்கி

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. சிங்காரவேலு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123423104
Out of Stock
Add to Alert List

சமீபத்தில் கார்க்கியைப்பற்றி நினைக்கவேண்டியிருந்தது. ஊட்டியில் குருகுலத்துக்குள் நித்யாவின் அறையைப்பார்க்க நண்பர்கள் விரும்பினார்கள். உள்ளே செல்லும்போது ஒருவர் நான் நித்யாவைச் சந்தித்த நாட்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினார். நான் நித்யாவைச் சந்திக்க வந்த நாளைப்பற்றி விவரித்தேன். சாமியார்கள்மேல் பெரும் சலிப்பு இருந்த காலகட்டம். நிர்மால்யா  கட்டாயப்படுத்தியும்கூட நான் ஊட்டி குருகுலத்துக்குச் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் அவர் சொன்னார், நித்யா கார்க்கியைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பதாக. ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. குருகுலம் வந்தேன். நான் உள்ளே நுழைகையில் அவர் காவிநிறக் குளிருடையும் குல்லாவும் அணிந்து குனிந்து புதிதாகப்பூத்த ரோஜாக்களைப் பார்த்துக்கொண்டு புத்தம் புதியதாகப் பிறந்தவர் போல வந்து கொண்டிருந்தார்.என்னைப்பொறுத்தவரை அது ஒரு தரிசனம்.