ஒவ்வொரு மனிதனும் வீட்டுக்கும் நாட்டுக்கும் முடிந்த அளவிற்குத்
தொண்டு புரியவே படைக்கப்பட்டிருக்கிறான். சோம்பலோடு இருப்பவரின் கால்களில்
சிலந்தி கூடு கட்டிவிடும். முடங்கியே இருப்பது வாழ்க்கையை விரயமாக்குவதன்றி
வேறெதுவும் இல்லை . உற்சாகத்தோடும் சுறுசுறுப்போடும் நீங்கள் தொடங்கும்
ஒரு வேலை அப்போதே பாதிக்கு மேல் முடிந்து விட்டது என்று அறிவுரை தருகிறார்
ராஜதந்திரத்தின் சிகரமான சாணக்கியர். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைக்
கண்டு பயப்படாமல் மேலும் முனைந்து செயல் புரிபவனே வெற்றி பெறுகிறான்;
சரித்திரத்தின் பொன்னேடுகளில் இடம் பெற்று மரணமின்றி வாழ்கிறான்.