கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இதை மற்றவர்களுக்கும் சொல்கிறோம். ஆனால், அந்த அரசாங்கம் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றும் என்று நாம் எந்தளவுக்கு உறுதியாக நம்புகிறோம்? அதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றனபூமியை யெகோவா எதற்காகப் படைத்தாரோ அந்த விருப்பத்தை நிறைவேற்றத்தான் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தினார். வானத்தையும் பூமியையும் ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை அந்த அரசாங்கம் நிரூபிக்கும். அதன் ராஜா யார்? அவரோடு யாரெல்லாம் ஆட்சி செய்வார்கள்? அதன் குடிமக்கள் யார்? இவற்றிற்கான பதில்களை ஒப்பந்தங்கள் மூலமாக யெகோவா தெரியப்படுத்தினார். சில ஒப்பந்தங்களை யெகோவா செய்தார்; ஒரு ஒப்பந்தத்தை இயேசு செய்தார். யெகோவா தம்முடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதை இந்த ஒப்பந்தங்கள் நிரூபிக்கின்றன. இவற்றை நாம் புரிந்துகொள்வது நம் நம்பிக்கையைப் பலப்படுத்தும்