வங்காள மொழியின் பெண் எழுத்தாளர் ஆஷாபூர்ணா தேவியின் ‘ப்ரதம் ப்ரதிஸ்ருதி’ என்ற நாவல் 1976ஆம் ஆண்டு ஞானபீட விருது பெற்றது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே ‘முதல் சபதம்’ என்ற இந்நூல். வங்க மண்ணில் சென்ற நூற்றாண்டின் சமூக சிக்கல்களில் சுயமிழந்து வாடி வதங்கிக் கிடந்த பெண் சமூகத்தின் புரட்சிக்குரலாய் ஒலிக்கிறது ‘முதல் சபதம்’