யானைக்கு ஒரு காலம் , புனைக்கு ஒரு காலம், என்ற இந்நூலில் காலம் நம் கையில் என்ற நம்பிக்கையை வளர்க்கும்
சிறுவர்களுக்கான பதினேழு கதைகள் இடம்பெற்றுள்ளன. பட்டத்து யானையின் மீது அமர்ந்து அரசனுடன் பவனி வருகின்ற அரசி ஒரு பூனையை மடிமீது வைத்து அதற்கு நன்றி பாராட்டும் அளவில் காலம் பின்புலத்திலிருந்து பூனையைக் கூடச் சாதனை படைக்கத் தூண்டுகிறது. யானைமீது பூனை பவனி வரவேண்டுமென்றால் சாதாரண காரியமல்ல. மேலும் சிறுவர்களின் சிந்தனையில் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் விதைக்கும் ஏனைய கதைகள் சேமிப்பின் தேவை, ஆணவத்தின் அழிவு, திருட்டுக்குக் கிடைத்த தண்டனை, பிறரை இகழாத தன்மை, பார்வையற்றவரும் பாதை காட்ட உதவுவார் என்றபயன்பாடு, பொய்க்கடிதம் தண்டனை தரும் என்ற படிப்பினை, கடத்தல்காரர்களிடமிருந்து நண்பர்களை மீட்பதற்கு மாணவன் கையாண்ட புத்திசாலித்தனம், வேதனையைச் சாதனையாக மாற்றுகின்ற வழிகாட்டுதல், உயர்வுதாழ்வு பாராட்டுவது பேதமை என்ற அறிவுறுத்தல், செய்யும் தொழிலில் இழிவில்லை என்று தெளிவூட்டுதல், மனம்போன போக்கில் போகக்கூடாது என்று எச்சரிக்கையூட்டுதல் அனைத்தும் இந்நூலில் எடுத்துரைக்கப்படுகிறது.
- பதிப்பகத்தார்.