இனிமையான பாடலைக் கேட்டுக் கொண்டே காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள் சந்தியா. பாடல் பாதியிலேயே நின்று விடவும் குழப்பத்துடன் நிமிர்ந்தவள் திகைப்பானாள். மாமியார் முத்துலட்சுமி கோபத்துடன் நின்றிருந்தாள். இது குடும்பம்னு நினைச்சியா? இல்லே... கிளப்னு நினைச்சியா...? வேலை நேரத்திலே மெய்மறந்து பாட்டைக் கேட்டுட்டு சாப்பாடு சரியா செய்யறதில்லை.