தன்னுடன்..... தனது அம்மா.... மற்றும் அவளை தாயாய் தாங்கும் அவளின் ஓரகத்தி.... நித்தியாவும் கூட இருக்கிறார்கள் தான்.... ஆனால் பயம், கண்ணை மூட முடியவில்லை அவளால்.... கண்ணை திறந்து வைத்துக் கொண்டே இருக் கிறாள்.... தூக்கம் என்பது மருந்துக்கும் வரவில்லை.... நர்ஸ் வந்து கூட அமைதியாய் சொன்னார்கள்.. "துர்காக்கா... ட்ரிப்ஸ் போட்டுருக்கு... நீங்க கண்ணை மூடி தூங்குங்க... எதையும் நினைக்காதீங்க..." என்றார்கள்... அவளுக்கோ 'ம்... பரிதாபம்.... அய்யோ.... சிறு பெண்ணெல்லாம் என்னை பார்த்துப் பரிதாபப்படுகிறார்களே' என தான் எண்ணம் தோன்றியது. அந்த நர்ஸ் மட்டும் அல்ல, அவளைப் பார்த்து பரிதாபப்படுவது.... அந்த ஹாஸ்பிட்டல் வளாகத்தில் உள்ள... இவளின் சொந்தங்கள் அனைத்தும்... அவளை பரிதாப பார்வைதான் பார்க்கின்றன..... ஆனால், தன்னைத் தாங்க வேண்டியவன் மட்டும்... அவன் கண்ணில் மட்டும்.... காதல் பார்வை வேண்டாம்.... ஒரு பரிதாபப் பார்வை மட்டும் போதும்... என இவளும் அவன் முகம் பார்த்தால் கூட.... ம்கூம்.... மருந்துக்கும் இல்லை.... எங்கே அவன் இவளை இப்போதெல்லாம் முறைப்பதற்காக கூட நிமிர்ந்து பார்ப்பதில்லை.... அதை விட இன்று மாலை நடந்ததை நினைத்தாள்.... அவளின் BP இன்னும் குறைந்தது.....