அவர் திரும்பிச் செல்ல, இவன் தலையுயர்த்தி பாஸ்கரைப் பார்த்தான். அப்போதும் இவனிடமே அவனின் பார்வை இருந்தது. முதலாளி திட்டியதையெல்லாம் அவன் காதிலேயே வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. மறுபடியும் மேல்நோக்கி ஆள்காட்டி விரலைக் காட்டி "மேல மாடிக்கு டீ கொண்டு வரவா?" என்று சைகை செய்தான். கேட்ட பாவனையில் இவனுக்கு புன்னகை வர, "வேண்டாம்! ஈவினிங் பார்க்கலாம்” என்று ஏறக்குறைய கண்ணடித்த முகபாவனையில் அவனுக்கு மட்டும் புரியும்படி தலையசைத்துவிட்டு மாடிப்படியருகே வந்தான்.