இந்நூல் ஆரிய மணல் மேடுகளிற் புதையுண்டு கிடந்த தமிழர் பெருந்தனம் என்றே கூறவேண்டும். இதனைச் சுட்டிக் காட்டியதும் ஒரு தமிழ்க் காசுவேயாகும். தற்காலத் தமிழறிஞர்களுக்கும், எதிர்கால இளைஞர்களுக்கும், வருங்காலப் புலவர்களுக்கும், இந்நூல் "தமிழ்நாட்டுக் கருவூல வழிகாட்டும் முதல்நூல்" எனச் சிறந்து விளங்குமென்பதிற் சிறிதும் ஐயமில்லை.