இருபதாம் நூற்றாண்டின் மருத்துவத்துறையையே கதி கலங்க வைத்த பெருமை எயிட்ஸ் நோய்க்கு உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அருந்தவத்தை மதவியலாளரும், ஒழுக்கவியலாரும் மனித சமுதாய மேம்பாட்டின் அடிக்கல்லாக் காட்ட முயன்றபோது எள்ளி நகையாடியோர் கூட பீதி காரணமாகவேனும் ஏற்க வைத்த பெருமை இந்நோய்க்கு உண்டு. அது பற்றிய தகவல்கள் பல வாரந்தோறும் புதிது புதிதாக வருகின்றன. கூடிய வரையில் அவற்றை எளிய தமிழில் அனைவருக்கும் அளிக்கும் பணியில் வைத்திய கலாநிதி முருகானந்தனின் இந்நூல் முன்னோடி என்றே கூற வேண்டும்.